1) உங்களுக்கு யாராவது தங்கிலீஷில் "Enna naNbarae nalamaa? naan ingu nalam. veettil anaivarum nalamaa?" என்று மெயில் அனுப்புகிறார்கள் என வைத்துக் கொள்வோம்.
2) ஒரு திரைப்பாடலின் வரிகளுக்காக நீங்கள் தேடோ தேடென்று தேடி, அது தங்கிலீஷில் இப்படிக் கிடைக்கிறது.
poovae poochchoodavaa
enthan nenjil paal vaarkkavaa
vaasal paarththu,
kaNkaL pooththu
kaaththu ninRaen vaa...
3)எவருக்கேனும் தமிழில் தட்டச்ச தெரியாமல், பக்கம் பக்கமாக நாடகமோ, கதையோ ஆங்கிலத்தில்... (அதான் தங்கிலீஷ்ல)
அடியோ அடின்னு அடிச்சு வச்சிருக்கிறதா நெனச்சுக்குவம்.
என்னது? என் அழகுத் தமிழை இங்கிலீஷ்ல படிக்கிறாதான்னு? கடுப்பாய்டுவீங்க இல்லியா?
சரி!
அது எல்லாத்தையும் தமிழ்ல படிக்கணும்னா... மறுபடி டைப் பண்ணனுமா?
ஹப்பா...?
ஆளை விடுடா சாமி-ன்னு ஆயிடும் இல்லியா?
Ok! Ok!
எல்லாத்தையும் ஒரே வினாடியில யாராவது, தமிழ்ல மாத்திக் குடுத்தா எவ்ளோ நல்லா இருக்கும்?
ஹ்ம்...!
அதுக்காக...
அலாவுதீனுடைய அற்புத விளக்குக்கு நான் எங்க போறது-ன்னு
ஆயாசமா இருக்கா?
அங்கதான் நம்ம அழகி உதவிக்கு வராங்க.
இந்த அழகி இருக்காங்களே...! அவங்களுக்கு நிகர் அவங்க மட்டும்தான்.
இந்த மாதிரி அற்புத விளக்கு சமாச்சாரமெல்லாம்,
அழகிக்கு அல்வா சாபிடற மாதிரி.
பக்கம் பக்கமா தங்கிலீஷ்ல நீங்க டைப் பண்ணி வச்சிருக்கற அம்பூட்டு மேட்டரையும்,
நொடியில தமிழுக்கு மாத்திக் குடுத்துடுவாங்க.
எப்பிடித் தெரியுமா?
முதல்ல அழகிய திறந்துக்கங்க.
இப்ப கீழ இருக்க மாதிரி ஒரு சன்னல் வரும்.
அதுல மேல இருக்க ETA பெட்டியில "ஆங்கிலத்துல" டைப் பண்ணா, கீழ உள்ள TTA பெட்டியில, "தமிழ்ல" வரும்.
இப்போ நீங்க தமிழுக்கு மாற்ற வேண்டிய English Text-ஐ Copy செய்து...
மேலே உள்ள ETA பெட்டியில் Paste பண்ணுங்க.
அவ்ளோதான்.
அந்த வினாடியே நீங்க விரும்பின தமிழ் எழுத்துக்கள்...
கீழ உள்ள TTA பெட்டியில் பளீரிடும்.
ஒரு உதாரணத்துக்கு...
மேல உள்ள "poovae poochchoodavaa" பாடல் வரிகளை தமிழுக்கு மாத்தியிருக்கேன்.
அப்புறமென்னங்க...?
என்சாய்.....! ஜமாய்...!
----------------------------------------------------
பின் குறிப்பு:
இன்னும் அதிக விபரங்களுக்கு கீழே உள்ள தொடுப்புகளில் க்ளிக் பண்ணிப் பாருங்க.
http://azhagi.com/pages/snaps/azPowerful.html
http://tech.groups.yahoo.com/group/azhagi/message/466
http://groups.google.com/group/azhagi/browse_thread/thread/26044a4d479e81b5?hl=en
http://groups.google.com/group/minTamil/browse_frm/thread/88fcf49e918fac2f#
ஞாபகம் வச்சுக்குங்க...
அழகி முற்றிலும் இலவசமான ஒரு மென்பொருள்! 100% FREE!
நீங்களும் உபயோகியுங்க...
மத்தவங்களுக்கும் சொல்லுங்க...
RetroSearch is an open source project built by @garambo | Open a GitHub Issue
Search and Browse the WWW like it's 1997 | Search results from DuckDuckGo
HTML:
3.2
| Encoding:
UTF-8
| Version:
0.7.3